×

ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் குழந்தை கொலை; மனைவி சீரியஸ் : ரயிலில் பாய்ந்து ஒன்றிய அரசுஊழியர் தற்கொலை

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் 18வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தவர் நவீன் கண்ணா (42). இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணியாற்றிவந்தார். இவரது மனைவி நிவேதிதா(30). இவர் பெரம்பூர் லோகோ அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மகன் லவின்கண்ணன் (7). நேற்று நவீன்குமார் தனது தாய் புவனேஸ்வரியிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றவுடன் சிறிது நேரம் கழித்து புதிய எண்ணில் இருந்து தாய்க்கு நவீன்கண்ணா பேசும்போது, ‘’மனைவி, மகன் இருவரும் வீட்டில் நீண்ட நேரம் தூங்குவார்கள். எனவே, அவர்களை இரவு 11 மணி வரை எந்த தொந்தரவு செய்யவேண்டாம்’’ என்று தெரிவித்துவிட்டு உடனடியாக போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் தாய், ‘’ ஏன் இப்படி கூறுகிறார்’ என்று தெரியாமல் தவித்துள்ளார். இதன்பிறகு மாமியார் சென்று படுக்கை அறை கதவை தட்டிய போது திறக்காததால் சந்தேகம் அடைந்து கூச்சல் போட்டுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்று பார்த்தபோது சிறுவன் லவின்கண்ணா கழுத்து துணியால் இறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக இறந்துகிடந்தான். நிவேதிதா கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.திருமங்கலம் போலீசார் சென்று சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, சென்னை வில்லிவாக்கம் ரயில்நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து நவீன் கண்ணா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

நவீன் கண்ணா, தான் பணியாற்றிவந்த மத்திய கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை கையாடல் செய்து அந்த பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பயத்தில் குடும்பத்துடன் தற்கொலை முடிவு எடுத்து முதலில் குழந்தையை கழுத்து நெரித்து கொன்றுவிட்டு பின்னர் மனைவி கழுத்தை கத்தியால் அறுத்து தானும் தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது.

Tags : Union government ,Annanagar ,Naveen Khanna ,18th Main Road, Annanagar, Chennai ,Central Security Control Accountants Office ,Teynampet ,Nivedita ,Perambur ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது