நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து அரசு சிறப்பு மருத்துவமனைக்குச் செல்லும் (தடம் எண் 2) மகளிர் விடியல் பேருந்தில் பயணம் செய்த பெண்களை டிரைவர், ‘ஓசிப்பேருந்து’ என இழிவாக பேசியதோடு, அவமதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண்களுக்கும், டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த டிரைவர் அவர்களை திட்டியதோடு, இரவு நேரத்தில் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து டிரைவர் முருகேசனை சஸ்பெண்ட் செய்து நெல்லை மண்டல பொதுமேலாளர் சிவக்குமார் உத்தரவிட்டார்.
