×

ஆர்சி புத்தகம் அடகு வைப்பு தந்தை திட்டியதால் மகன் மாயம்

திருச்சி, டிச.29: திருச்சி உறையூர் பாக்குபேட்டையை சேர்ந்தவர் விஜயரகுநாதன் மகன் யோகராஜ்(24). இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்ேடார் வைத்து நடத்தி வருகிறார். இதில் கடந்த 21ம் தேதி அவசர தேவைக்காக பணம் தேவைப்பட்டதால் அவரது பைக்கின் ஆர்சி புத்தகத்தை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். தகவலறிந்த தந்தை விஜயரகுநாதன், எதற்காக கடன் வாங்கினாய் என கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் காணாததால் இது குறித்து தந்தை விஜயரகுநாதன் உறையூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மணிராஜ் வழக்குப்பதிந்து மாயமான யோகராஜை தேடி வருகிறார்.

Tags : RC ,book mortgage father ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 11 சவரன், பிளாட்டினம் திருட்டு