×

7 மாணவிகளிடம் சில்மிஷம் அரசு பஸ் கண்டக்டர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி அந்த மாணவி, தோழிகளுடன் பள்ளிக்கு அரசு டவுன் பஸ்சில் சென்றார்.
அந்த பஸ், ஆவணியூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது, கண்டக்டர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அருகில் நின்ற மாணவிகளிடமும் தொட்டு பேசி சில்மிஷம் செய்துள்ளார். பள்ளியில் இருந்து மாலையில் மாணவி வீடு திரும்பியதும், இதுபற்றி தாயாரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அரசு பஸ் கண்டக்டரான இடைப்பாடி சித்தூரை சேர்ந்த சின்னசாமி (45) என்பவர், 7 மாணவிகளிடம் பஸ்சில் சென்று வரும்போது சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சின்னசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.விசாரணைக்குப்பின் கண்டக்டர் சின்னசாமியை சேலம் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Silmisham ,Salem ,Salem District Vidyapadi ,
× RELATED கேள்வி கேட்டதால் ஆத்திரம்; திமுக...