×

அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூர்: காட்பாடி காந்திநகர் பகுதியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக இமெயில் முகவரிக்கு மிரட்டல் சென்றுள்ளது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் உடனடியாக வேலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று மாலை வேலூர் மாவட்ட காவல்துறை வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மற்றும் மோப்ப நாய் ரீட்டா உதவியுடன் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு வந்த தகவல் புரளி என்பது தெரிய வந்தது.

Tags : Vellore ,Tamil Nadu ,Water Resources ,Minister ,Duraimurugan ,Gandhinagar ,Katpadi ,Ranipet Collector ,Ranipet police ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது