×

தமிழகத்தில் இருந்து கடத்திய 405 கிலோ பீடி இலை பறிமுதல்

ராமேஸ்வரம் : தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட 405 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.இலங்கை கடற்படையினர் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடற்கரையில் சந்தேகத்திற்குரிய முறையில் வந்த பைபர் படகை சோதனை செய்தனர். அப்போது படகில் 11 மூட்டைகளில் இருந்த 405 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் படகிலிருந்த கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் பீடி இலைகள் தமிழக கடல் எல்லையில் இருந்து கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் அந்நாட்டு சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : Tamil Nadu ,NAVY ,SRI LANKA ,Sri Lankan Marines ,Kalpitiya Navy ,Puttalam District ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது