×

ஓபிஎஸ்., டிடிவி மீண்டும் இணைப்பா? அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தபின் நல்லதே நடக்கும்: நயினார் நாகேந்திரன் ஆருடம்

 

நெல்லை: நெல்லைபெருமாள்புரத்தில் உள்ள இல்லத்தில் பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் இடம் பெறுவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் அமித்ஷா மற்றும் பா.ஜ. தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அதன் பின்னர் நல்லதே நடக்கும். நானும் எடப்பாடி மற்றும் பா.ஜ. தலைவர்களுடன் கூட்டணி பற்றி பேசியுள்ளேன்.

டிடிவி தினகரன் கூறியபடி தேர்தலில் 4 முனைப் போட்டியும் இருக்கலாம். 5 முனை போட்டியும் இருக்கலாம். ஆனால் தேர்தலில் ஜெயிக்க போவது தேஜ கூட்டணிதான். அதிமுகவில் எவ்வித குழப்பமும் இல்லை. செங்கோட்டையன் திடீர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்பதெல்லாம் உண்மையில்லை. அதிமுக கூட்டணியில் இருப்பதால், அதன் பொதுசெயலாளர் டெல்லிக்கு சென்று தலைவர்களை சந்திக்கிறார். நடிகர் விஜய் பிரசார பயணம் மற்றும் அவர்கள் கட்சி கூட்டத்தை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. கூட்டம் சேர்த்தால் ஜெயிக்க முடியுமா? ஓட்டு வாங்கினால்தான் ஜெயிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags : OPS ,TTV ,Edappadi ,Amit Shah ,Nainar Nagendran Arudam ,Nellai ,BJP ,Nainar Nagendran ,MLA ,Nellaiperumalpuram ,National Democratic Alliance ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...