×

மிலாதுன் நபி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை: மது விற்றால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

சென்னை: மிலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விதி மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மிலாதுன்நபி தினத்தை முன்னிட்டு நாளை(வெள்ளிக்கிழமை)தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகளின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள்,

எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏ)/ எப்எல்3FL3(ஏஏ) முதல் எப்எல்11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மிலாதுன் நபி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tasmak ,Miladun Prophet's Day ,Chennai ,Tasmak shops ,Miladhunnabi Day ,Tamil Nadu ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...