- முன்னாள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- கே.ஏ.செங்கோட்டையன்
- செங்கோட்டையன்
- குள்ளம்பாளையம்
- கோபி?. திருக்குறள்
- எடப்பாடி
- Palaniswami
ஈரோடு: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் வந்துள்ளனர். கோபி அருகே குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் இல்லத்துக்கு ஆதரவாளர்கள் வந்த நிலையில், அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது மீண்டும் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் அதிமுக தலைமை மீதான அதிருப்தி குறித்து செப்.5ல் மனம் திறப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் பழனிசாமி பிரச்சார பயணம் சென்ற போது செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
