- சீனா
- பாக்கிஸ்தான்
- ஆபரேஷன் சிந்தூர்:
- காங்கிரஸ்
- மோடி
- ஜின்பிங்
- புது தில்லி
- பொதுச்செயலர்
- ஜெய்ராம் ரமேஷ்
- எக்ஸ் தளம்
- இந்தியா
- சிந்தூர் நடவடிக்கை
- பாகிஸ்தான்...
புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,பயங்கரவாதம் குறித்து சீனாவின் இரட்டை நிலைப்பாடு மற்றும் இரட்டைப் பேச்சு குறித்து இந்தியா நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தா னுக்கு சீனா உதவிகளை வழங்கியதை இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளே உறுதிபடுத்தியுள்ளனர்.
இப்போது, பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங்கிடம், இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்று கூறுகிறார். டிராகன் என்று அழைக்கப்படுபவருக்கு முன்னால் யானை சரணடைந்துள்ளது என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
