×

பாஜக எம்.பி.அனுராக் தாக்கூர் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கண்டனம்

டெல்லி: விண்வெளியில் முதலில் கால் பதித்தது அனுமன்தான் என்று பேசிய பாஜக எம்.பி.அனுராக் தாக்கூர் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கண்டனம் தெரிவித்துள்ளார். அனுராக் தாக்கூர் போன்ற பாஜக தலைவர்கள் அறிவியலை கேலி செய்வதாக எம்.ஏ.பேபி குற்றம்சாட்டியுள்ளார். “புராணக் கதையை கூட பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. புராணத்தில் கூட அனுமன் விண்வெளியில் அல்ல, வளிமண்டலத்தில் பயணித்ததாகத்தான் கூறப்படுகிறது. பகுத்தறிவு சிந்தனை மீதான தாக்குதல் நமது மாணவர்களையும் விஞ்ஞானிகளையும் அவமதிக்கிறது” என எம்.ஏ.பேபி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Marxist ,General Secretary ,M.A. Baby ,BJP ,Anurag Thakur ,Delhi ,Hanuman ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்