×

அலைச்சறுக்கு போட்டி 4 இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி

மாமல்லபுரம்: ஆசிய அலைச் சறுக்கு (சர்ஃபிங்) சாம்பியன்ஷிப் போட்டிகள், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடந்து வருகின்றன. 5ம் நாளான நேற்று, ஆடவர் ஓபன் 3வது சுற்று போட்டியில் நேற்று, இந்திய வீரர் ரமேஷ் புடிஹால், ஹீட் 2ல் 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் இந்தோனேஷிய வீரர் மெகா அர்தானா முதலிடம் பிடித்தார். ஹீட் 7ல் இந்திய வீரர் கிஷோர் குமார் 10.14 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார். அதேபோல் ஹீட் 8ல் இந்திய வீரர் காந்த், 8.90 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்து காலிதிக்கு முன்னேறினார். 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான பிரிவில், ஹீட் 5ல், இந்திய வீரர் ஹரீஷ் 9.50 புள்ளிகளுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றார். நேற்று, அலைச்சறுக்கு போட்டிகளில் 4 பிரிவுகளில் இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளனர்.

Tags : Mamallapuram ,Asian Surfing Championships ,Mamallapuram beach ,Men's Open ,Ramesh Budihal ,
× RELATED வெ.இ.க்கு எதிரான 3வது டெஸ்டில்: வெற்றி...