×

கலைஞரின் 7வது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் தலைமையில் 7ம் தேதி அமைதிப்பேரணி

 

சென்னை: சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், சிற்றரசு ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் 7வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட திமுக முன்னணியினர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி ஆகஸ்ட் 7ம் தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்படும், காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.

இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்-முன்னாள்-இந்நாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணியினரும் பங்கேற்க வேண்டும்.

 

Tags : Chief Minister ,Chennai ,district ,DMK ,secretaries ,M. Subramanian ,P.K. Sekarbabu ,Mayilai T. Velu ,Madhavaram Sudarsanam ,R.T. Sekar ,Chittarasu ,Tamil ,Nadu ,president ,M.K. Stalin ,General Secretary ,Duraimurugan ,Treasurer ,D.R. Balu ,Principal Secretary ,Deputy General Secretaries ,Omandurar Complex ,Anna Salai, Chennai ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...