- தமிழ்நாடு காவல்துறை
- டிஜிபி
- சென்னை
- தமிழ்நாடு காவல் துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உள்துறை செயலாளர்
- தேரஜ்குமார்
சென்னை: தமிழக காவல் துறையில் உயர் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையின்படி, மாநில காவல்துறையில் சில முக்கிய உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, உளவுத்துறை மற்றும் பொருளாதார குற்றப்பிரிவில் நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பால நாக தேவி, ஐபிஎஸ் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக பணியாற்றி வருகிறார். இவர், சென்னை உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக உளவுத்துறை ஏடிஜிபி பதவி, டிஜிபி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சந்தோஷ் குமார் ஐபிஎஸ் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக பணியாற்றி வருகிறார். இவர் அதே பிரிவின் ஏடிஜிபி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
ரூபேஷ் குமார் மீனா, ஐபிஎஸ் தற்போது குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி ஐஜியாக இருக்கிறார். இவர் அதே பிரிவின் ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். அதேபோல், மாவட்ட அளவிலான கண்காணிப்பாளர் பொறுப்புகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரபாகர் சென்னை சைபர் க்ரைம் பிரிவு-III கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவர், சென்னை மண்டல அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். கோபி சென்னை மண்டல அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்தார். இவர், தற்போது சென்னை திட்டமிடப்பட்ட குற்ற நுண்ணாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
