நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் மதிமுக பங்கேற்காது: வைகோ அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில், மதிமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பது தான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது. திமுக உள்ளிட்ட கட்சிகள் திறப்பு விழாவில் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளன. எனவே, மதிமுகவும் அந்த நியாயமான கருத்தை ஏற்றுக் கொண்டு திறப்பு விழாவில் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளது என்றார்.

The post நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் மதிமுக பங்கேற்காது: வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: