நியோமேக்ஸ் மோசடி: 15 மாதங்களில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நியோமேக்ஸ் நிதி நிறுவன வழக்கு விசாரணையை 15 மாதங்களில் முடித்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டது தனியார் நிறுவனமான நியோமேக்ஸ் நிதி நிறுவனம். இந்த நிதி நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தனது கிளைகளை அமைத்து அதிக வட்டி தருவதாக மக்களிடம் ஆசை வார்த்தைக்குறி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீடாக பெற்றது.

இந்த முதலீட்டின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலங்கள் வாங்கி விற்பனை செய்து வந்தது. இந்த நிதி நிறுவனம் கூறியபடி முதலீட்டாளர்களுக்கு உரிய வட்டி தொகையையும், நிதிகளை திருப்பி கொடுக்காததால் மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவன இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் வழங்கப்பட ஜாமினை ரத்து செய்ய கோரியும், முன்ஜாமீன் மனுக்களை ரத்து செய்ய கோரியும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி அமைத்து பொருளாதாரங்களை இழந்த மக்களுக்கு இழப்பீடுகளை திரும்ப தரவேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் இது போன்ற நிதிநிறுவனங்கள் நடத்தி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த வழக்கில் 11 ஆயிரம் நபர்கள் மட்டுமே முதலீடுகளை திரும்ப பெற்றுள்ளனர். இத்தகைய நியோமேக்ஸ் நிதி நிறுவன வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பங்கு தொகைகள் திரும்ப அளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விதிகளை வகுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் யாரெல்லாம் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக தமிழக அளவில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இந்த புகாரை பெற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை 15 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நிதி நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தையும் கண்டறிந்து இந்த வழக்கில் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்ட வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அரசின் உரிய வழிமுறைகளை பின்பற்றி சொத்துகள் அனைத்தையும் விற்பனை செய்து முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

The post நியோமேக்ஸ் மோசடி: 15 மாதங்களில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Related Stories: