அப்போது பேசிய அவர் அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் தாக்குதல்களை இந்திய மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாக கோரினார். சமீபத்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதனை நிரூபித்துள்ளதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார். இந்தியாவில் இந்த முறை பிரதமரை கண்டும், பாரதீய ஜனதா கட்சியை கண்டும் மக்கள் அஞ்சவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகளை தெளிவாக்கி இருப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். அரசியல் அமைப்பு சட்டம் மதம் மற்றும் மாநிலங்கள் மீதான தாக்குதல்களை இனியும் ஏற்கப்போவதில்லை என்பதை உணர்த்த இந்திய மக்களின் மகத்தான சாதனைகள் இவை என்றும் ராகுல்காந்தி கூறினார்.
The post அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமர் மோடியின் தாக்குதலை மக்கள் தெளிவாகப் புரிந்துக் கொண்டுள்ளனர்: பாஜக, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம் appeared first on Dinakaran.