நாமக்கல்லில் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் சிலம்பொலி செல்லப்பனுக்கு சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நாமக்கல்லில் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலை மற்றும் அறிவகத்தை திறந்து வைத்தார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: செல்லப்பன் என்ற பெயரே மறைந்து ‘சிலம்பொலி’, ‘சிலம்பொலியார்’ என்று அழைக்கப்பட்டவர்தான் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார்.

1976ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது, சிலம்பொலியாரை பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பொறுப்பில் இருந்து தகுதி இறக்கம் செய்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஆக்கியது அன்றைய கவர்னர் ஆட்சி. அந்த காலம் முதல் இந்த காலம் வரை கவர்னர் ஆட்சி என்றால் இப்படித்தான் நிர்வாகம் தெரியாமல் நடந்துள்ளது. 1989ம் ஆண்டு திமுக ஆட்சி மீண்டும் மலர்ந்ததும், உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக முதல்வர் கலைஞர் நியமித்தார்.

இத்தகைய பெருமைக்குரிய தமிழ் அடையாளமாக விளங்கும் சிலம்பொலியாருக்கு சிலை அமைப்பது மிக மிக மகிழ்ச்சிக்குரியது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, கொமதேக தலைவர் ஈஸ்வரன், பிஜிபி குழுமத்தின் தலைவர் பழனி பெரியசாமி, சிலம்பொலி செல்லப்பன் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post நாமக்கல்லில் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் சிலம்பொலி செல்லப்பனுக்கு சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: