முத்துக்குளிவயல் வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் வராமல் தடுக்க கண்காணிப்பு தீவிரம்..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் முத்துக்குளிவயல் வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானையை குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் வராமல் தடுப்பதற்காக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திற்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை கம்பம் பகுதிமக்களை அச்சுறுத்தி வந்ததால் பெரும் போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நெல்லை மாவட்டம் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் புல் வெளிகள் நிறைந்த யானைகளின் வசிப்பிடமான முத்துக்குளிவயல் வனப்பகுதியில் அந்த யானை விடப்பட்டது. இந்நிலையில் மேலக்கோதையாறு நீர்மிநிலையம் அருகே அரிசி கொம்பன் யானையை கண்டா கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். யானை வந்தால் விரட்டுவதற்கு தயாராக 35 வன ஊழியர்கள் 2 இடங்களில் ரோந்து பணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முத்துக்குளிவயல் வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் வராமல் தடுக்க கண்காணிப்பு தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: