முத்தியால்பேட்டை கிராமத்தில் மூலஸ்தம்மன் கோயில் ஆடி மாத திருவிழா

வாலாஜாபாத்: முத்தியால்பேட்டை கிராமத்தில் மூலஸ்தம்மன் கோயில் ஆடி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மூலஸ்தம்மன் கோயில் ஆடி மாதம் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 23ம் ஆண்டு ஆடிமாத திருவிழாவையொட்டி, ஸ்ரீ மூலஸ்தம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடைபெற்றது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சிம்லாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 டன் எடையுள்ள 3 ஆயிரம் ஆப்பிள் பழத்தில் 20 அடி மாலையை தோரணமாக தொங்கவிட்டப்படி சிறப்பு அலங்காரத்தில், மூலஸ்தம்மன் 28 கைகளுடன், பல்வேறு வண்ண வண்ண மலர் மாலைகளில் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், வான வேடிக்கையுடன், பேண்ட் வாதியங்களுடன் மூலஸ்தம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, வழிநெடுக்கிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் உடைத்தும், தீபாராதனை காண்பித்து அம்மனை வழிப்பட்டு, தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

The post முத்தியால்பேட்டை கிராமத்தில் மூலஸ்தம்மன் கோயில் ஆடி மாத திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: