இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உள்ளுர் பெட்ரோல் பங்க்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் கலப்படம் இருப்பதாக சந்தேகம் அடைந்து, அந்த டீசலை உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை ஊழியர்கள் ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். அதில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கலந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெட்ரோல் பம்ப் சீல் வைக்கப்பட்டது. அந்த பம்ப்பில் இருந்த 5995 லிட்டர் பெட்ரோல் மற்றும் 10,657 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. பம்பின் உரிமையாளர் மற்றும் அதன் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
The post 19 வாகனங்களில் கலப்பட டீசல் நடுரோட்டில் நிறுத்தப்பட்ட மபி முதல்வர் கான்வாய்: பெட்ரோல் பங்க்குக்கு சீல் appeared first on Dinakaran.
