நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில் கூறியதாவது; கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.

தொகுதி நிலவரம் – அரசின் திட்டங்களால் மக்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம் – தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட அமைச்சர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட – ஒன்றிய – பகுதி – நகர – பேரூர் கழக நிர்வாகிகள் – மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தோம். பத்தாண்டுகளில் இழந்த உரிமைகளை மீட்டு எடுப்பதற்கான வாய்ப்பே இந்தத் தேர்தல் என உணர்ந்து பணியாற்றுமாறு உரையாற்றினோம் என்று பதிவிட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை! appeared first on Dinakaran.

Related Stories: