அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தாய் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் அமராவதி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும், விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் மறைவெய்திய செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தாய் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: