2024-25ம் ஆண்டுகான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆக.21-ம் தேதி தொடங்குகிறது. (MBBS), (BDS), மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 2024-25ம் ஆண்டுகான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

பின்னர் பேசிய அமைச்சர் கூறியதாவது; இவ்வாண்டு மருத்துவ படிப்புக்கு 43,063 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 2,721 அதிகம். அரசு ஒதுக்கீட்டின் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 495 எம்பிபிஎஸ் இடங்களும் 125 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாணவர் ரஜினீஷ் முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை சென்னை மாணவர் சையது யூசுப், 3-வது இடத்தை சென்னை மாணவி சைலஜா பிடித்தனர்.

4-வது இடத்தை ஸ்ரீராமும், 5-வது இடத்தை ஜெயதி பூர்வஜா பிடித்தனர். தரவரிசை பட்டியலில் 6-வது இடத்தை நாமக்கல் மாணவர் ரோகித்தும் 7-வது இடத்தை சபரீசனும் பிடித்துள்ளனர். மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசை பட்டியலில் மாணவி ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை சென்னை தைசாப்பேட்டை பள்ளி காயத்ரி தேவியும், 3-வது இடத்தை தண்டராம்பட்டு மாணவி அனுஷியாவும் பிடித்தனர்.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசை பட்டியலில் 669 மதிப்பெண் பெற்ற மாணவி ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை 668 மதிப்பெண் பெற்ற சென்னை தைசாப்பேட்டை அரசு பயிற்சி மையத்தில் படித்த காயத்ரி தேவி பிடித்துள்ளார். 665 மதிப்பெண் பெற்ற தண்டராம்பட்டு மாணவி அனுஷியா 3-வது இடத்தை பிடித்தார். 665 மதிப்பெண் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் ரத்தீஷ் 4-வது இடம், திருவண்ணாமலை கலசப்பாக்கத்தைச் சேர்ந்த அன்பரசன் 5-வது இடம் பிடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

 

The post 2024-25ம் ஆண்டுகான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்! appeared first on Dinakaran.

Related Stories: