புதுக்கோட்டை மனநல காப்பகத்தில் மனிதாபிமானமற்ற முறையில் 50 பெண்கள் நடத்தப்பட்டுள்ளனர் :அமைச்சர் மா.சுப்ரமணியன்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மனநலம் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 50 பேர் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இயங்கிவந்த தனியார் தொண்டு நிறுவன மனநலக் காப்பகத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அங்குள்ள சிறிய அறைகளில் 59 பெண்கள் தங்கவைக்கப்பட்டதை கண்டறிந்தார். மேலும் சுகாதார மற்ற முறையில் காப்பகம் இயங்குவதும் தெரியவந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் மா.சுப்ரமணியன் உடனடியாக அந்த மனநல காப்பகத்தின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மனநலம் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 50 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை இன்று காலை அமைச்சர் மா.சுப்ரமணியன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுக்கோட்டை அருகே மனநலம் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 50 பேர் பாதுகாப்பாக உள்ளனர். மனநல காப்பகத்தில் மனிதாபிமானமற்ற முறையில் 50 பெண்கள் நடத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி தொடங்கும்.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும்,”எனத் தெரிவித்தார்.

The post புதுக்கோட்டை மனநல காப்பகத்தில் மனிதாபிமானமற்ற முறையில் 50 பெண்கள் நடத்தப்பட்டுள்ளனர் :அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: