மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது: ஆய்வுக்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: புயல் முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து, பாதுபாப்பு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். கும்மிடிப்பூண்டி அடுத்த துரைநல்லூரில் துணை மின் நிலையம் உள்ளது. புயல் காரணமாக பல பகுதிகளுக்கு மின் துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் அதனை, உடனடியாக சரி செய்யும் வகையில் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து நேற்று காலை மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். இதுகுறித்து, மின்துறை மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், மின்வாரியத்துறை பொறியாளர் மற்றும் துணை பொறியாளரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் அளித்த பேட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை, புயல் காரணமாக கடலோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படாத வகையில் தேவையான தளவாட பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 3,650 மின்கம்பங்கள், 450 கிமீ மின்கம்பிகள், 40 மின்மாற்றிகள் 1,500 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். புயலால் மின்சாரம் தடைபட்டாலும், உடனுக்குடன் சீரமைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்காத வகையில் மின்சாரம் வழங்கிட முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எத்தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

The post மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது: ஆய்வுக்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: