மேல்மருவத்தூர், திருப்பதி ரயில்கள் பகுதியளவில் ரத்து

விழுப்புரம்: பொறியியல் பணி காரணமாக விழுப்புரத்திலிருந்து மேல்மருவத்தூர், திருப்பதி வரை இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் ரயில் நிலைய யார்டு பகுதியிலும், குண்டக்கல் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளிலும் பொறியியல், தண்டவாள பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் மேல்மருவத்தூரில் முற்பகல் 11.45 மணிக்கு புறப்படும் மேல்மருவத்தூர்-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்-06725) முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையே ஆகஸ்ட் 19,21,26,28, செப்டம்பர் 2,4,10 ஆகிய தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.

எதிர்வழித்தடத்தில் விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.44 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- மேல்மருவத்தூர் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 06726) விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே ஆகஸ்ட் 19,21,26,28, செப்டம்பர் 2,4,10 ஆகிய தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. முண்டியம்பாக்கத்துடன் இந்த ரயில் நிறுத்தப்படும். விழுப்புரத்திருந்து காலை 5.30 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி என் 16854), காட்பாடி-திருப்பதி இடையே ஆகஸ்ட் 20ம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். எதிர்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் திருப்பதி- விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16853) திருப்பதி- காட்பாடி இடையே ஆகஸ்ட் 20ம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரம் புறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மேல்மருவத்தூர், திருப்பதி ரயில்கள் பகுதியளவில் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: