×

மக்களைத் தேடி மருத்துவம் இந்தியா முழுவதும் பொதுமருத்துவ சேவைக்கான மாதிரியாக மாறியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு


சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களின் பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறது என்ற கணக்கெடுப்பின் முடிவு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: மருத்துவச் சேவைகளை மட்டுமல்ல, அதன்வழியே சிறப்பான முடிவுகளையும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அளிக்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தை 17 விழுக்காடும், நீரிழிவு நோயை 16.7 விழுக்காடும் கட்டுப்படுத்திப் பொது மருத்துவச் சேவையின் வெற்றிக்கான அளவுகோலை மாற்றியமைத்து வருகிறது. மக்கள் மருத்துவமனைகளைத் தேடி வருவதற்காகக் காத்திராமல், மக்களின் வீடுகளை நாடிச் சென்று ஈட்டிய வெற்றி இது. இந்தியா முழுவதும் பொதுமருத்துவச் சேவைக்கான மாதிரியாக இது மாறியுள்ளது. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

The post மக்களைத் தேடி மருத்துவம் இந்தியா முழுவதும் பொதுமருத்துவ சேவைக்கான மாதிரியாக மாறியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்