மாயனூர் அரசு அம்மா பூங்காவில் காய்ந்து போன தென்னை மரம் அகற்றம்

 

கிருஷ்ணராயபுரம், மே 1: கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் அரசு அம்மா பூங்காவில் காய்ந்து போன தென்னை மரத்தை தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவனை உள்ளது . இங்கு நாள்தோறும் கரூர், திண்டுக்கல், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 250 முதல் 500 நபர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் மாயனூர் காவிரி கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் பகுதி அருகே செயல்பட்டு வரும் அரசு அம்மா பூங்காவிற்கு வந்து மகிழ்வது வழக்கமாக கொண்டிருந்தனர்.

இங்கு பூங்காவின் முகப்பு பகுதியில் தென்னை மரம் ஒன்று காய்ந்து போன நிலையில் இருந்தது. அதனை அகற்ற வேண்டும் என சுற்றுலா வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இது குறித்து கடந்த வியாழக்கிழமை அன்று ஏப்ரல் 27ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகமானது அரசு அம்மா பூங்காவில் காய்ந்து போன நிலையில் இருந்த தென்னை மரத்தினை அகற்றினர். காய்ந்துபோன தென்னை மரத்தினை அகற்றியதற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ்க்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

The post மாயனூர் அரசு அம்மா பூங்காவில் காய்ந்து போன தென்னை மரம் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: