ரூ.238.52 கோடி மதிப்பீட்டில் மணலி மண்டலம் சடையன்குப்பம் மற்றும் காடப்பாக்கம் பகுதிகளில் கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் தொடக்கம்

சென்னை: ரூ.238.52 கோடி மதிப்பீட்டில் மணலி மண்டலம் சடையன்குப்பம் மற்றும் காடப்பாக்கம் பகுதிகளில் கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.238.52 கோடி மதிப்பீட்டில் மணலி மண்டலம், வார்டு – 15 இடையன்சாவடி, வார்டு – 16, சடையன்குப்பம் மற்றும் காடப்பாக்கம் பகுதிகளில் கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் 08.03.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், மேற்கண்ட பகுதிகளில் 72.77 கி.மீ நீளத்திற்கு 250 மி.மீ முதல் 500 மி.மீ விட்டமுடைய கழிவுநீர் குழாய்கள் மற்றும் 22.65 கி.மீ. நீளத்திற்கு 150 மி.மீ முதல் 700 மி.மீ. விட்டமுடைய கழிவுநீர் விசைக் குழாய்கள் பதிக்கும் பணிகள் 10.03.2024 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2921 எண்ணிக்கையிலான இயந்திர நுழைவாயில்கள், 3 துணை உந்து நிலையங்கள், 8 சாலையோர உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு 5.61 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம், இடையன்சாவடி, சடையன்குப்பம் மற்றும் காடப்பாக்கம் பகுதிகளில் உள்ள 262 தெருக்களில் 4000 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 46,730 பொதுமக்கள் பயன் பெறுவர்.

The post ரூ.238.52 கோடி மதிப்பீட்டில் மணலி மண்டலம் சடையன்குப்பம் மற்றும் காடப்பாக்கம் பகுதிகளில் கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: