மகாத்மா காந்தியின் நினைவு தினம்: வெறுப்பு என்னும் புயலில் உண்மை, நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது: ராகுல் காந்தி, ஆளுநர் ரவி புகழஞ்சலி

டெல்லி: வெறுப்பு, வன்முறையின் சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 30ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் தியாகிகள் தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காந்தியின் நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலரும் புகழஞ்சலி செலுத்தினர். அந்த வகையில்,

உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணையக்கூடாது: ராகுல் காந்தி

வெறுப்பு மற்றும் வன்முறையின் சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெறுப்பு மற்றும் வன்முறையின் சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றது. அதே வெறுப்பு சித்தாந்தம் காந்தியின் கொள்கைகள், லட்சியங்களை நம்மிடமிருந்து பறிக்க முயல்கிறது. வெறுப்பு என்னும் புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர் மலர்தூவி மரியாதை:

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் மரியாதை செலுத்தினார். எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ரவி, அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

காந்திக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன்: ஆளுநர் ரவி

மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மகாத்மா காந்தியின் புண்ணியதிதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மகாத்மா காந்தியின் நினைவு தினம்: வெறுப்பு என்னும் புயலில் உண்மை, நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது: ராகுல் காந்தி, ஆளுநர் ரவி புகழஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: