மாவிலையின் மகத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மாமரத்தின் பூர்வீகம் இந்தியாதான். இதன் இலை, பூ. பிஞ்சு, காய், பழம், வித்து மரப்பட்டை, வேர், பிசின் போன்ற அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது. மாஇலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.

கொழுந்து இலையை வதக்கி, தேனில் கலந்து குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீருடன் கலந்து அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசிவந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்புநீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஜீரணசக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும். மாம்பட்டையைக் குடிநீர்செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது.

மா வேர்பட்டை வயிற்றுப்புண் குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மாம்பழம் அதிக வைட்டமின் சத்துகள் நிறைந்தது. இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம்.

மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால் , அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப் போக்கு குணமாகும். மாம்பருப்பை பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

தொகுப்பு : இரா. அமிர்தவர்ஷினி

The post மாவிலையின் மகத்துவம்! appeared first on Dinakaran.

Related Stories: