இந்த விவகாரம் வெளியே தெரியவர, கடந்த 15ம் தேதி ஆயுஷி தனது காதலன் சச்சினுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அதிர்ச்சியடைந்த கணவர் விஷால், அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் தனது மனைவி காணாமல் போனதாகப் புகார் அளித்தார். பின்னர், ஆயுஷி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததுடன், தனது மகளையும் தன்னுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன், கடந்த 20ம் தேதி உள்ளூர் கோயில் ஒன்றில் ஆயுஷிக்கும், கள்ளக்காதலன் சச்சினுக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தின்போது, ஆயுஷியின் முதல் கணவரான விஷாலே சாட்சியாக நின்று அந்த திருமணத்தை நடத்தி வைத்தது அங்கிருந்தவர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விஷால் துபே கூறுகையில், ‘சச்சின் துபேவுடன் வாழ்வது தான் அவருக்கு (மனைவி ஆயுஷி குமாரி) மகிழ்ச்சி என்றால், அதனை நான் தடுக்க மாட்டேன். ஆனால், என் மீதான அவரது குற்றச்சாட்டுகள் பொய். இனிமேல் அவர் சச்சினின் பொறுப்பு’ என்று கூறியுள்ளார். இந்த விநோத திருமணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post 3 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவர்: பீகாரில் நடந்த விநோதம் appeared first on Dinakaran.
