மக்களவை தேர்தலின் போது பதிவான வாக்குகள் விவரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடாதது ஏன்?: நிர்மலா சீதாராமன் கணவன் பரகலா பிரபாகர் கேள்வி

சென்னை: மக்களவை தேர்தலின் போது பதிவான வாக்குகள் விவரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடாதது ஏன் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அன்பகத்தில் வாட்ஸ் அப் தமிழ்நாடு என்ற அமைப்பு சார்பில் 2024 திருடப்பட்ட தீர்ப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன் கணவரும் சமூக அரசியல் சிந்தனையாளருமான பரகலா பிரபாகர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

முறையாக விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் நிராகரிக்கபட்டு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் மொத்தம் பதிவான வாக்குகளை அறிவிக்கவில்லை என்றும் சதவீதமாக தன தெரிவித்தது என்றும் அவர் தெரிவித்தார். இன் மூலம் எப்படி தேர்தல் ஆணையத்தை நம்ப முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். 39 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற போதும் ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தமிழகத்தைவிட குறைந்த எண்ணிக்கையிலான மக்களவை தொகுதிகள் இருந்த போதும் அங்கெல்லாம் பல கட்டங்களாக தேர்தல் நடத்தியதாக பரகலா பிரபாகர் குற்றம்சாட்டினார்.

The post மக்களவை தேர்தலின் போது பதிவான வாக்குகள் விவரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடாதது ஏன்?: நிர்மலா சீதாராமன் கணவன் பரகலா பிரபாகர் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: