லித்துவேனியா தேர்தலில் தற்போதைய அதிபர் அமோக வெற்றி

கோபன்ஹேகன்: லித்துவேனியா நாட்டின் அதிபராக கிடானஸ் நவுசேடா உள்ளார். அந்த நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் கிடானஸ் நவ்சேடா மற்றும் பிரதமர் இங்கிரிடா சைமோனி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில் 49.25 % வாக்குகள் பதிவானது.

அதிபர் தேர்தலில் வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டதில் கிடானஸ் 74.5 % வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இங்கிரிடா சைமோனிக்கு 24.1 % வாக்குகள் கிடைத்தன. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிடானஸ் உக்ரைனுக்கு மிகவும் ஆதரவாக செயல்பட்டுள்ளார். பெலாரஸ், ரஷ்யாவில் அரசியல் அடக்குமுறைகளுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பி வந்த பலருக்கு லித்துவேனியா அதிபர் அடைக்கலம் அளித்துள்ளார். மீண்டும் அதிபராக தேர்வு பெற்றுள்ள நவ்சேடா வரும் ஜூலையில் தனது பொறுப்பை ஏற்பார்.

The post லித்துவேனியா தேர்தலில் தற்போதைய அதிபர் அமோக வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: