காணையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை முகாம்-புகழேந்தி எம்எல்ஏ திடீர் ஆய்வு

விக்கிரவாண்டி : தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கப்படுமென சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி இத்திட்டத்தின் மூலமாக முதல் கட்டமாக ஒரு கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படுமென தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் கொண்ட டோக்கன்களை வழங்கினர்.

இந்நிலையில் இத்திட்டத்துக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தமிழகம் முழுவதும் 36,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 2ம் கட்டமாக முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் அருகேயுள்ள காணை அரசு தொடக்கப்பள்ளியில் கலைஞரின் உரிமைத்தொகை திட்ட இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை புகழேந்தி எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, உரிய முறையில் குடும்பத்தலைவிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்படுகிறதா, தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கிறார்களா என்பது குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி, துணை சேர்மன் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஆர்.முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் கல்பட்டு ராஜா, ஆர்.பி.முருகன், கவுன்சிலர் கருணாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post காணையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை முகாம்-புகழேந்தி எம்எல்ஏ திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: