குமரி கடலில் அமைந்து உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.10.22 கோடியில் லேசர் லைட்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரூ.10.22 கோடியில் லேசர் லைட் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சுற்றுலா அதிகாரி தெரிவித்து உள்ளார். குமரி மாவட்ட ஊராட்சி கூட்டம் மாவட்ட ஊராட்சித் தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி சதீஷ்குமார் கூறுகையில், ‘கன்னியாகுமரியில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.10.22 கோடியில் லேசர் லைட் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. அதனை போன்று சிற்றார்-2 அணை பகுதியில் ரூ.3.40 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதுவும் விரைவில் தொடங்க உள்ளது. முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி பகுதியில் மேம்பாடு பணிகள் ரூ.7.15 கோடியில் நடக்க உள்ளது, இது டென்டர் நிலையில் உள்ளது.’ என்று தெரிவித்தார்.

The post குமரி கடலில் அமைந்து உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.10.22 கோடியில் லேசர் லைட் appeared first on Dinakaran.

Related Stories: