கோவையில் இந்தியாவின் முதல் தங்க நகை உற்பத்தி பூங்கா: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

கோவை: கோவையில் தங்க நகை பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழக அரசு இந்தியாவில் முதன்முறையாக ஒரு தனிப்பட்ட தங்க நகை உற்பத்தி பூங்காவை கோவை மாவட்டம் குறிச்சியில் உள்ள சிட்கோ தொழிற்துறையில் நிறுவ உள்ளது. சிட்கோ தொழிற்சாலையில் 2.46 ஏக்கர் நிலத்தில் 8.5 லட்சம் சதுரஅடியில் இந்த பூங்கா ரூ.126 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்கள் கொண்ட கட்டிடமாக தங்க நகை உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதில் நகை உற்பத்தி யூனிட்கள், 3D அச்சிடும் மற்றும் லேசர் கட் செய்யும் வசதிகள், ஹால்மார்க் தர பரிசோதனை கூடம், பாதுகாப்பு வால்ட், கண்காட்சி மண்டபம், மாநாட்டு மண்டபம், பயிற்சி மையம் மற்றும் நவீன கண்காணிப்பு வசதிகள் அமைய உள்ளது.

பூங்காவில் 3 வகை நகை உற்பத்தி இடங்கள் இருக்கும். பெரியவையாக 500 சதுரஅடி, நடுத்தரமாக 200 சதுரஅடி மற்றும் சிறியதாக 100 சதுரஅடி உள்ளன. முதல் கட்டத்தில் 28 பெரிய யூனிட்கள், 72 நடுத்தர யூனிட்கள் மற்றும் 316 சிறிய யூனிட்கள் கட்டப்படும். கூடுதலாக, 12 டிரக் நிறுத்தும் இடங்கள், 21 கார் மற்றும் 1200 இருசக்கர வாகன நிறுத்தும் இடங்களும் திட்டத்தில் உள்ளன. இரண்டாம் கட்டத்தில் 315 நடுத்தர மற்றும் 2500 சிறிய யூனிட்கள் அமைக்கப்படும்.இந்த நிலையில், கோவையில் தங்க நகை பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. கோவையில் முதல்கட்டமாக ரூ.45 கோடியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள சிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

The post கோவையில் இந்தியாவின் முதல் தங்க நகை உற்பத்தி பூங்கா: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!! appeared first on Dinakaran.

Related Stories: