அமராவதி: ஆந்திராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்பிய 3 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் சிக்னலா பகுதியை சேர்ந்த 14 பேர் கொண்ட குழுவினர் டெம்போ டிராவல் மூலம் திருப்பதிக்கு சென்றனர். அங்கு ஏழுமலையானை சாமி தரிசனம் செய்து விட்டு, இன்று காலை சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அப்போது அதிகாலை 5 மணியளவில் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் அருகே தொம்மனா பாவி எனும் பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தது.
அப்போது பின்னல் அதிவேகத்தில் வந்த லாரி டெம்போ டிராவல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து லாரி நிற்காமல் தப்பி சென்றது. இந்த விபத்தில் டெம்போ டிராவல் வலது புறம் முழுவதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆந்திர மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கர்நாடக பக்தர்கள் திருப்பதிக்கு சென்று திரும்பிய போது சாலை விபத்து: வேன் மீது லாரி மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே மூவர் பலி appeared first on Dinakaran.
