காஞ்சிபுரம் தனியார் உணவகத்தில் ஆனியன் ஊத்தாப்பத்தில் கம்பி துண்டால் பரபரப்பு: வீடியோ வைரல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் டிகே நம்பி தெரு பகுதியில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர், தனது நண்பருடன் சாப்பிட சென்றுள்ளார். அங்கு, ஆசை ஆசையாய் ஆனியன் உத்தப்ப தோசை கொண்டுவர ஆர்டர் கொடுத்துள்ளார். அப்போது, சுட சுட ஆனியன் ஊத்தாப்ப தோசையை சப்ளையர் பரிமாறி விட்டுச்செல்ல, ஆனியன் தோசையை வாடிக்கையாளர் சாப்பிட்டபோது, எதிர்பாராத விதமாக ஆனியன் ஊத்தாப்பத்தில் இரும்புத்துண்டு கம்பி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இரும்பு கம்பியை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், உணவக மேலாளரை அழைத்து புகார் தெரிவித்துவிட்டு, வாடிக்கையாளர் அதிகம் வந்து சாப்பிடும் உணவகத்தில் கவன குறைவாகவும், அஜாக்கிரதையாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் இரும்பு கம்பியுடன் உள்ள ஊத்தாப்ப தோசையை வீடியோவாக பகிர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இதில், வாடிக்கையாளர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த இரும்பு கம்பி துண்டுள்ள ஆனியன் தோசை குறித்த காட்சிகள் தற்பொழுது உணவகத்திற்கு நாள்தோறும் வந்துசெல்லும் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post காஞ்சிபுரம் தனியார் உணவகத்தில் ஆனியன் ஊத்தாப்பத்தில் கம்பி துண்டால் பரபரப்பு: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: