ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியானது.!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியானது. தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இதனை தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அனுப்பப்பட்ட நிலையில், விளக்கம் கேட்டு ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் மாதம் இரண்டாவது முறையாக ஆன்லைன் தடை சட்டமசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்த நிலையில், ஆளுநர் இந்த மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியானது. அடுத்த கட்டமாக ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஆணையம் அமைக்கப்படும்.

தலைமை செயலாளர் பதவிக்கு குறையாத பதவி வகித்து ஓய்வு பெற்றவர் ஆணைய தலைவராக இருப்பார். ஓய்வு பெற்ற ஐஜி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆணைய உறுப்பினர்களாக இருப்பார். ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரும் விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக இருப்பார். ஆன்லைன் விளையாட்டை வழங்குவோரை ஆணையம் கண்காணித்து, அவர்களைப் பற்றிய தரவுகளை பராமரிக்கும். ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்கள் மீதான புகாரை விளையாட்டு ஆணையம் தீர்த்து வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியானது.! appeared first on Dinakaran.

Related Stories: