இந்நிலையில், சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் கால் பாதித்த வெற்றியை தங்களுக்கு சாதகமாக்க பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் அளித்த ஊக்கமும், அதிக நிதி ஒதுக்கீடும் தான் சந்திரயான் வெற்றிக்கு உதவியதாக பாரதிய ஜனதா தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதிலடியாக இஸ்ரோவை உருவாக்கியது நேரு தலைமையிலான ஒன்றிய அரசு என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
இஸ்ரோ உருவாக்கப்பட்டது 1969-ம் ஆண்டு. அப்போது நேரு மறைந்து விட்டார் என கூறி காங்கிரஸ் பொய் கூறுவதாக பாரதிய ஜனதா தரப்பில் கூறப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் வகையில், X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ்; இஸ்ரோவின் முந்தைய வடிவம் INCOSPAR என்றும் அதை 1962-ல் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார் என்றும் தெரிவித்துள்ளார். INCOSPAR-ஐ ஏற்படுத்தும் போதும் நேருவுடன் இருந்த 1969-ல் இஸ்ரோவாக அதை மாற்றினார் என ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார். மொத்தத்தில் பூமியில் மட்டுமின்றி நிலவிலும் இந்த விஷயத்தில் அரசியல் அனல் பறக்கிறது.
The post இஸ்ரோவை உருவாக்கியது யார்?: சந்திரயான்-3 வெற்றியை தனதாக்கிக் கொள்ள பாஜக, காங்கிரஸ் மோதல்..!! appeared first on Dinakaran.