இம்பால்: மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் போராட்டத்தால் மேற்கு இம்பாலில் மீண்டும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 6 பேர் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாஜக எம்.எல்.ஏ. சபம் கொஞ்சகேசு வீட்டை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். மற்றொரு எம்.எல்.ஏ. சபம் நிஷிகந்தா மற்றும் ஆர்.கே. லிமோ வீடுகளும் சூறையாடப்பட்டன
The post மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: பாஜக எம்.எல்.ஏ. வீடு சூறை appeared first on Dinakaran.