சர்வதேச ஆவண மற்றும் குறும்பட போட்டியில் எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படம் தேர்வு

சென்னை: 16வது சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட போட்டி கேரளாவில் நேற்று தொடங்கியது. வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைக் கலைஞர்கள், இந்தியாவில் இருந்து எண்ணற்ற குறும்படங்கள் போட்டியிட்டன. இதில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த இளங்கலை காட்சிக்கலை மாணவியான பரோ சலில் இயக்கிய ஆவண குறும்படம் ‘கலர்ஸ் ஆப் கோலிவுட் – எ மெலனின் டெப்ஷியன்சி’, 22 ஆவண குறும்படங்களில் ஒன்றாக திரையீட்டிற்காக அதிகாரப்பூர்வ பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆவண படம் வெள்ளை சருமத்தின் மீதான விருப்பம் இந்தியர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ளது, தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுடனான உரையாடல் மூலம் ஆவணப்படம் இதை ஆய்வு செய்கிறது. தமிழ் நடிகைகள் குறித்தும் ஆவணப்படம் பேசுகிறது. இந்தபடத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநரான ஹரிஹரன், விளம்பர திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் புகைப்பட கலைஞர் நரேஷ் நில், சர்வதேச விருது பெற்ற நடிகை மியா மெல்சர் மக்கள் தொடர்பாளரான கவிதா இம்மானுவேல், ஜே என் யூ மாணவியான ஹருஷிக்கா, திரைப்பட இயக்குநர் மற்றும் விரிவுரையாளர் மணி ஷங்கர் நாராயணன் உள்ளிட்ட பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் தயாரித்ததாகும்.

The post சர்வதேச ஆவண மற்றும் குறும்பட போட்டியில் எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படம் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: