இந்நிலையில், ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி முதற்கட்டமாக ஈரானில் இருந்து சுமார் 110 இந்திய மாணவர்கள் பஸ்கள் மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இண்டிகோ விமானம் மூலம் அமெரிக்கா வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானம் இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. மாணவர்களை வரவேற்க அவர்களின் பெற்றோர் திரண்டிருந்தனர். ஈரானில் இருந்து மீட்கபட்ட மாணவர்களில் 90 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள்.
The post போர் சூழல் அதிகரித்துள்ள நிலையில் ஈரானில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் டெல்லி திரும்பினர் appeared first on Dinakaran.
