இந்திய, பாக். போர் கப்பல்கள் இலங்கை வருகை

கொழும்பு: இந்தியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் நேற்று நான்கு நாள் பயணத்தை தொடங்கியது. இதேபோல் பாகிஸ்தான் கப்பலும் இலங்கை வந்துள்ளது. சர்வதேச யோகா தினத்தின் 9வது ஆண்டையொட்டி ,இந்திய தூதரகம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதில் பங்கேற்கும் வகையில் இந்திய கடற்படை சார்பில் சர்வதேச பெருங்கடல் வளையம் என்ற கருப்பொருளின் கீழ் இந்திய கடற்படைக்கு சொந்தமான கல்வாரி வகையை சேர்ந்த வாகீர் நீர்மூழ்கி கப்பல் தனது நான்கு நாள் கடல் பயணத்தை தொடங்கி உள்ளது. கொழும்பு துறைமுகத்துக்கு செல்லும் வாகீர் நீர்மூழ்கி கப்பல் பார்வையாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் டெல்லி, சுகன்யா, கில்தான் மற்றும் சாவித்ரி நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான திப்பு சுல்தான் போர் கப்பல் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகம் வந்துள்ளது.

The post இந்திய, பாக். போர் கப்பல்கள் இலங்கை வருகை appeared first on Dinakaran.

Related Stories: