இந்தியாவில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விற்பனையை நிறுத்தியது பானாசோனிக் நிறுவனம்

டெல்லி: இந்தியாவில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விற்பனையை பானாசோனிக் நிறுவனம் நிறுத்தி உள்ளது. பானாசோனிக் (Panasonic) என்பது ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனம். இது மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. இது உலகளவில் நன்கு அறியப்பட்ட ஒரு பிராண்ட் ஆகும். பானாசோனிக் நிறுவனம் பல வகையான தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது, அவற்றில், தொலைக்காட்சி, கேமரா, ஆடியோ சாதனங்கள், மற்றும் வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் அடங்கும். குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், காற்றுச்சீரமைப்பிகள் போன்றவை அடங்கும்.

இந்த நிலையில், ஜப்பானின் பானாசோனிக் நிறுவனம் இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.பானாசோனிக் வீட்டு ஆட்டோமேஷன், ஏசி, பி2பி தீர்வுகள் போன்ற பிரிவுகளில் கவனம் செலுத்தவுள்ளது. ஊழியர் பணிநீக்கங்கள் இருக்கும் என்றும், ஆனால் வாடிக்கையாளர் சேவை தொடரும் என்றும் பானாசோனிக் தெரிவித்துள்ளது. அரியானாவின் ஜஜ்ஜாரில் உள்ள தனது தொழிற்சாலையில் இந்த தயாரிப்புகளுக்கான உற்பத்தி யூனிட்களை பானாசோனிக் மூடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பானாசோனிக்கின் முடிவால் இதர நிறுவனங்களான வேர்ல்பூல், வால்டாஸ் பங்குகள் அதிகரித்து வருகிறது.

The post இந்தியாவில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விற்பனையை நிறுத்தியது பானாசோனிக் நிறுவனம் appeared first on Dinakaran.

Related Stories: