இந்நிலையில் உலகளவில் 1,600 கோடி பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. முதன்முறையாக அதிக எண்ணிக்கையில் கடவுச்சொற்கள் திருடப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இவ்வாறு திருடப்பட்ட கடவுச்சொற்கள் டார்க் வெப் தளத்தில் விற்கப்பட்டு ஹேக்கர்களுக்கு செல்கிறது. அதை பயன்படுத்தி தனி நபர் அல்லது நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு சமூக விரோத செயல்களை செய்யப்படுகின்றன. மேலும் இது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. மிகப்பெரும் இந்த திருட்டிலிருந்து தப்பிக்க உடனடியாக அனைத்து சமூக ஊடக பயனாளர்களும் தங்கள் பாஸ்வேர்ட்களை உடனே மாற்றுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
The post இணைய வரலாற்றில் முதல்முறையாக 1,600 கோடி பாஸ்வேர்ட்கள் திருட்டு: தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? appeared first on Dinakaran.
