ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் 4வி

ஹீரோ நிறுவனம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் எஸ் 4வி என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப வகையிலும், தோற்றத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்ட பைக்காக அறிமுகம் ஆகியுள்ளது. இந்த பைக்கில் 199.6 சிசி சிங்கிள் சிலிண்டர் 4 வால்வு ஆயில் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 19.1 எச்பி பவரையும், 17.35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஏற்கெனவே உள்ள எக்ஸ்ட்ரீம் 200எஸ் 2வி அதிகபட்சமாக 18.08 எச்பி பவரையும், 16.45 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. இதைவிட புதிய பைக் அதிக திறன் கொண்டதாக வெளிவந்துள்ளது.

மேலும் இந்த பைக்கில் எல்சிடி கன்சோல் இடம்பெற்றுள்ளது. இதனுடன் புளூடூத் மூலம் மொபைல் போனை இணைத்துக் கொள்ளலாம். நேவிகேஷன், போன் அழைப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் வசதி இதில் உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரை புதிதாக 3 வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கின் ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.41 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 எஸ் 2வியை விட சுமார் ரூ.5,000 அதிகம். அதேநேரத்தில், இதே திறன் கொண்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, பஜாஜ் பல்சர் எப் 250 ஆகியவற்றை விட விலை குறைவு. பல்சார் 220எப்ஐ விட விலை குறைவு.

The post ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் 4வி appeared first on Dinakaran.

Related Stories: