இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர்அனுர குமார திசநாயகே வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பதவியை ராஜினாமா செய்ததாக தினேஷ் குணவர்தனே தெரிவித்தார்.
இதனை அடுத்து இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
The post இலங்கையின் 16ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு appeared first on Dinakaran.